Saturday, August 18, 2012


அடிப்படைகள் மட்டுமே
ஆரோக்கியமான உணவுகள், நீரிழிவு நோயைத் தடுத்தலும் சமாளித்தலும் என்பனவற்றிற்கான குறிப்புகள்

பல்வே று வகை யான நீரி ழிவு ந� ோய்க ள் இருக்கின்றன. இரத்தக்
குளுக்கோஸை(இரத்த ச் சக்கரை )க் கட்டுப்படுத்துவதற்கா க அவை
எப்படிச் சமாளிக்கப்படுகின்றன என்பதை இந்த விளக்க அட்ட வணை
காண்பி க்கிறது.
பல்வேறு வகையான நீரிழிவு நோய்கள் இருக்கின்றன. இரத்தக் குளுக்கோஸை(இரத்தச் சக்கரை)க் கட்டுப்படுத்துவதற்காக அவை எப்படிச் சமாளிக்கப்படுகின்றன என்பதை இந்த விளக்க அட்டவணை காண்பிக்கிறது.
நீரிழிவு நோயின் வகை
டைப் 1 நீரிழிவு நோய்:
கணையம் இன்சுலினைச் சுரக்காது.
குளுக்கோஸ், சக்திக்காக உபயோகப்படுத்தப்படுவதற்குப் பதிலாக உங்களுடைய உடலில் சேமிக்கப்படுகிறது.
  • ஆரக்கியமான உணவு
  • இன்சுலின்
டைப் 2 நீரிழிவு நோய்:
கணயம் போதியளவு இன்சுலினைச் சுரக்காது, அல்லது அது சுரக்கும் இன்சுலினை உங்களுடைய உடல் தகுந்த முறையில் உபயோகிக்பதில்லை.
  • ஆரோக்கியமான உணவு
  • உடற்பயிற்சி
  • குளிகைகள் அல்லது இன்சுலின் (சில நிலைமைகளில் இரண்டும்)
நீரிழிவு நோய்க்கு முந்திய நிலைமை
நீரிழிவு நோய்க்கு முந்திய நிலைமை:
இரத்தக் குளுக்கோஸின் அளவுகள் இயல்பை விட அதிகமாக இருக்கும், ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் எனக் கண்டறியப்படும் அளவுக்கு அதிகமாக இல்லை
  • ஆரோக்கியமான உணவு
  • உடற்பயிற்சி
கர்ப்ப கால நீரிழிவு நோய்:
கர்ப்ப காலத்தில் உயர் இரத்தக் குளுக்கோஸ் தொடங்குதல் அல்லது அல்லது அந்தக் காலத்தில் முதல் முதலாகக் கண்டறியப்படுதல்
  • ஆரோக்கியமான உணவு
  • உடற்பயிற்சி
  • இன்சுலின் உபயோகிக்கப்படலாம்.

No comments:

Post a Comment