Saturday, August 18, 2012


நீரிழிவு நோயுடன் நல்வாழ்வு வாழ்வதற்காக உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல்

ஏன் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்?

ஒழுங்கான உடற்பயிற்சி உங்களுடைய இரத்தக் குளுக்கோஸின் கட்டுப்பாட்டை முன்னேற்றுவிக்கும். உங்களுடைய உடலும் மனமும் முன்னேற்றமடைந்திருப்பதையும் கூட உணருவீர்கள்.
18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட வளர்ந்தவர்கள், ஒவ்வொரு வாரமும் குறைந்த பட்சம் 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும் என கனடாவின் பொதுசன சுகாதார முகமை சிபாரிசு செய்கிறது.
இதை நீங்கள் ஒரு நாளில் 30 நிமிடங்கள் வீதம், வாரத்தில் ஐந்து முறை உடற்பயிற்சியாக செய்யலாம். உங்களுடைய தினசரி நடவடிக்கைகளில் உடற்பயிற்சிக்கும் நேரத்தை ஒதுக்கவும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும்.

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்கவும்

Image of Running Shoesஆரோக்கியமான உடற்பயிற்சி என்பது, உங்களுடைய செல்லப்பிராணியுடன் ஒரு சுறுசுறுப்பான நடைக்காக வெறுமனே வெளியே செல்வதாகவும் இருக்கலாம். அல்லது, நீங்கள் மின்னுயர்த்தி அல்லது தானியங்கி மின்படிகளுக்குப் பதிலாக மாடிப்படிகளை உபயோகிப்பதைத் தெரிவு செய்யலாம். பஸ் வண்டியிலிருந்து ஒரு பஸ் நிறுத்தம் முன்பதாக இறங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் நடந்து செல்லலாம். மோசமான காலநிலையின்போது, அநேக மக்கள் நடைப்பயிற்சிக்காக உள்ளூர் பல்கடை அங்காடிக்குள் செல்கிறார்கள்.
மெதுவான நடையில் தொடங்கவும். நீங்கள் தயாரான பின்னர், உங்களுடைய நடையின் வேகத்தை மெதுவாக அதிகரிக்கலாம்.
சுறுசுறுப்பாக இருப்பதற்கு அநேக வழிகள் இருக்கின்றன. அவை பின்வருமாறு:
  • இலைகளை வாருதல்
  • ஜொக்கிங் செய்தல்
  • நீந்துதல்
  • வீட்டுவேலை
  • மாடிப்படியில் ஏறி இறங்குதல்

எதிர்ப்பாற்றலைக் கொடுக்ககூடிய உடற்பயிற்சிகளை முயற்சி செய்யவும்:

வாரத்துக்கு மூன்று முறைகள் உங்களுடைய தசைகளுக்கு வேலைகொடுக்கவும். எதிர்ப்பாற்றலைக் கொடுக்கக்கூடிய உடற்பயிற்சிகளின் உதாரணங்கள் பின்வருமாறு:
  • எடை தூக்குதல்
  • புஷ்-அப்ஸ்
  • சிட்-அப்ஸ்
  • ரெஸிஸ்டன்ஸ் பான்ட் என அழைக்கப்படும் இலாஸ்டிக் பட்டி ஒன்றை உபயோகித்து உடற்பயிற்சி செய்தல்

சில ஏரோபிக் செயற்பாடுகளை செய்யவும்

ஒரு நாளில் 30 நிமிடங்கள் மிதமானது தொடக்கம் தீவிரமானது வரையான ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும்படி கனடாவின் பொதுசன சுகநலத் முகமை சிபாரிசு செய்கிறது.
மிதமான ஏரோபிக் செயற்பாடு உங்களை கடினமாகச் சுவாசிக்கவும் உங்களுடைய இருதயத்தைவேகமாகத் துடிக்கவும் செய்ய வைக்கிறது. உங்களால் பேச முடியவேண்டும், ஆனால் பாட முடியாதவாறு இருக்கவேண்டும். உதாரணங்கள் விரைவாக நடத்தல், ஸ்கேட்டிங், மிதிவண்டி ஓட்டுதல் என்பனவற்றை உட்படுத்தும்.
தீவிரமான ஏரோபிக் செயற்பாடு உங்களுடைய இதயத் துடிப்பின் வீதத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கச் செய்யும். உங்களுடைய மூச்சைப் பிடிக்காமல் ஒரு சில வார்த்தைகளுக்கு மேலாக உங்களால் பேச முடியாதவாறு இருக்கவேண்டும். உதாரணங்கள் ஓடுதல், கூடைப்பந்தாட்டம், சோக்கர், குறஸ்-கன்ட்ரி பனிச் சறுக்குதல் என்பனவற்றை உட்படுத்தும்.

உங்களுடைய குடும்பத்தினருடன் சுறுசுறுப்பாக இருக்கவும்

தொலைக்காட்சி பார்த்தல் அல்லது சினிமாவுக்குப் போவதற்குப் பதிலாக, ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு உங்களுடைய அக்கம்பக்கத்தில் ஒட்டவும். உள்ளூரிலுள்ள நீச்சற்குளத்திற்குச் சென்று நீச்சல் பயிற்சி செய்யவும். புதியதாக ஏதோவொன்றைச் செய்வதாக உங்களுக்கு நீங்களே ஒரு சவால் விடுங்கள். உதாரணமாக, நடனம் கற்றுக்கொள்ளவும், மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளவும் அல்லது யோகாப் பயிற்சி செய்யவும்.
சுறுசுறுப்பான ஒரு வாழ்க்கைப்பாணி நீரிழிவு நோயைச் சமாளிப்பதற்கு உங்களுக்கு உதவலாம்!
சுறுசுறுப்பாக வாழ்வது பற்றி மேலும் கற்றுக் கொள்ளவும்: சுறு சுறுப்பாவதற்கு சில வழிகள்

No comments:

Post a Comment